லாரி விபத்து-உயிர் தப்பினார் சி.ஆர். சரஸ்வதி

செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி அதி வேகமாக ஒரு மணல் லாரி வந்தது. கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே வந்தபோது அந்தலாரி டிரைவர் திடீர் பிரேக் போட்டு நிறுத்தினார்.
அப்போது லாரிக்குப் பின்னால் அதிமுக நிர்வாகிகள் வந்த 3 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக் கொண்டன. இதில் 3 கார்களும் சேதம் அடைந்தன. ஒரு காரில் அதிமுக மாநில மகளிர் அணி துணை செயலாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி வந்தார்.
மோதிய வேகத்தில் அவரது காரும் சேதம் அடைந்தது. ஆனாலும் அவர் காயமின்றி உயிர் தப்பினார். மற்றவர்களும் காயமின்றி தப்பினார்கள்.
இந்த விபத்து காரணமாக ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து படையினர் போக்குவரத்தை சீர்செய்தனர்.
ஆனால், போலீஸ் வருதற்குள் விபத்து ஏற்படுத்திய மணல் லாரியை அங்கிருந்து மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்று மாயாமானர் லாரி டிரைவர். போலீசார் அந்த லாரியை தேடி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











