அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்-வடிவேலு வெடி!

திமுகவின் புதிய பிரச்சார பீரங்கியாக மாறியுள்ளார் வடிவேலு. வரும் மார்ச் 24 ம் தேதி முதல்வர் கருணாநிதியுடன் இணைந்து தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கும் வடிவேலு தமிழகம் முழுக்க திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.
இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "அய்யா கலைஞர் மீண்டும் முதல்வராகணும். அதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது.
அவர் தலைமையிலான அணியில் டெண்டுல்கர் மாதிரி முக அழகிரி அண்ணனும், வீரேந்திர சேவாக் மாதிரி நம்ம முக ஸ்டாலின் அண்ணனும் நல்ல நல்ல திட்டங்களை சிக்ஸர்கள் மாதிரி விளாசப் போகிறார்கள். மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கப் போகுது...
நாட்டுக்கு கேடு விளைவிக்கும் சக்திகளைப் புரிஞ்சிக்கிட்டு ஒதுக்கித் தள்ளுங்க," என்றார்.
Comments


Click it and Unblock the Notifications