twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்-வடிவேலு வெடி!

    By Shankar
    |

    Vadivelu
    மத்திய அமைச்சர் முக அழகிரிதான் சச்சின் டெண்டுல்கர், துணை முதல்வர் முக ஸ்டாலின் வீரேந்திர சேவாக் மாதிரி... இந்த ரெண்டு சூப்பர் பேட்ஸ்மேனும் தமிழ்நாட்டுக்கு பல நல்ல திட்டங்கள் எனும் சிக்ஸர்களை அடித்து தருவார்கள், என்றார் நடிகர் வடிவேலு.

    திமுகவின் புதிய பிரச்சார பீரங்கியாக மாறியுள்ளார் வடிவேலு. வரும் மார்ச் 24 ம் தேதி முதல்வர் கருணாநிதியுடன் இணைந்து தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கும் வடிவேலு தமிழகம் முழுக்க திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.

    இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "அய்யா கலைஞர் மீண்டும் முதல்வராகணும். அதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது.

    அவர் தலைமையிலான அணியில் டெண்டுல்கர் மாதிரி முக அழகிரி அண்ணனும், வீரேந்திர சேவாக் மாதிரி நம்ம முக ஸ்டாலின் அண்ணனும் நல்ல நல்ல திட்டங்களை சிக்ஸர்கள் மாதிரி விளாசப் போகிறார்கள். மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கப் போகுது...

    நாட்டுக்கு கேடு விளைவிக்கும் சக்திகளைப் புரிஞ்சிக்கிட்டு ஒதுக்கித் தள்ளுங்க," என்றார்.

    English summary
    Vadivelu, who is known as Vaigai Puyal says that, "a good team has been formed under Tamil Nadu Chief Minister and DMK president M Karunanidhi for this Assembly polls. For me, Union Minister M K Alagiri is like Sachin Tendulkar and Deputy Chief Minister M K Stalin is like Virendar Sehwag."
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X