முன்னணி நடிகர்களுக்கு வினியோகஸ்தர்கள் திடீர் நிபந்தனை

By Muthukrishnan

ஒரு படம் தோற்றாலோ, அதனால் நஷ்டம் வந்தாலோ, அந்தப் படத்தின் நாயகன் உள்ளிட்ட முக்கிய கலைஞர்கள் அதே தயாரிப்பாளருக்கு மீண்டும் காலஷீட் கொடுத்து நஷ்டத்திலிருந்து தூக்கிவிட வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சங்கம் திடீர் நிபந்தனை விதித்துள்ளது.

தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்களின் சிறப்பு கூட்டம், சென்னை ஆந்திரா கிளப்பில் நேற்று நடந்தது. தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.பாலாஜி தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.பிரான்சிஸ் முன்னிலை வகித்தார்.

சென்னை-காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், கோவை மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்க பொதுச்செயலாளர் திருப்பூர் சுப்பிரமணியம், நாகராஜராஜா உள்பட அனைத்து மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

"தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் சமீபகாலமாக மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். தமிழகத்தில் இருந்த 2 ஆயிரம் திரையரங்குகளில் பாதிக்கு மேல் சுமார் 1,000 திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன.

இருக்கிற திரையரங்குகளையும், வினியோகஸ்தர்களையும், தயாரிப்பாளர்களையும் காப்பாற்றி, சினிமா தொழிலை காப்பாற்றும் பொருட்டு முத்தரப்பினரும் கூடி, கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்ற ஆலோசனை செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

பெரிய நடிகர்கள் - இயக்குநர்களுக்கு முக்கிய நிபந்தனை

முன்னணி நடிகர்கள், மற்றும் முன்னணி இயக்குநர்கள் பங்கேற்கும் படங்களில் வரும் பெரிய நஷ்டங்களினால்தான் இந்த தாங்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

எனவே இனிவரும் காலங்களில் எந்த ஒரு பெரிய பட்ஜெட் படம் (ரூ.10 கோடிக்கு மேல் எடுக்கப்படும் படம்) நஷ்டத்தை சந்திக்குமானால், அந்த படத்தில் பணியாற்றிய முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் அடுத்த கால்ஷீட் அதே தயாரிப்பாளர்களுக்கு கொடுத்து, அந்த நஷ்டத்தை ஈடுகட்டித்தர ஒத்துழைப்பு தரவேண்டும்.

மேலும், மேற்படி தயாரிப்பாளர் மேற்படி படத்தை அதே வினியோகஸ்தர்களுக்கும், அதே திரையரங்கு உரிமையாளர்களுக்கும் கொடுத்து, அவர்களது நஷ்டத்தை ஈடுகட்டித் தரவேண்டும்..."

இவ்வாறு அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திடீர் நிபந்தனை முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கம் இதுகுறித்து விரைவில் பேசவிருப்பதாகத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X