நடிகை குட்டி பத்மினியிடம் ரூ.12 லட்சம் மோசடி: கமிஷனரிடம் புகார்

By Sudha

Kutty Padmini
சென்னை: பிரபல நடிகை குட்டி பத்மினி தனது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 3 பேர் ரூ.12 லட்சம் மோசடி செய்துவிட்டதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பிரபல நடிகை குட்டி பத்மினி சிறு வயதில் இருந்தே நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிப்பை நிறுத்தி வி்ட்டு தன் கணவர் பிரபு நேபாலுடன் சேர்ந்து டி.வி. சீரியல்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகரில் தன் குடும்பத்தோடு வசித்து வருகிறார். அங்கு தான் அவரது அலுவலகமும் உள்ளது. நேற்று காலை 11 மணியளவில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நடிகை குட்டி பத்மினி துணை கமிஷனர் ஆசியம்மாளிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

என் அலுவலகத்தில் பணிபுரிந்த சமீரா என்ற பெண் உள்பட 3 பேர் சேர்ந்து எனக்கு தெரியாமல் ரூ.12 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். இது மட்டுமின்றி என் அலுவலகத்தில் இருந்து நிறைய பைல்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். தற்போது அவர்கள் 3 பேரும் தலைமறைவாக உள்ளனர்.

சமீரா எனக்கு அனுப்பிய இ-மெயிலில், நான் பணத்தை கேட்டு போலீசில் புகார் கொடுத்தால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டியள்ளார். எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை வாங்கித் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரின் பேரில் தக்க நடவடிக்கை எடுக்குமாறு நுங்கம்பாக்கம் உதவி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X