twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வரதட்சணைக் கொடுமை வழக்கு-காவ்யா மாதவன் கணவரின் மனு தள்ளுபடி

    By Sudha
    |

    Kavya Madhavan
    திருவனந்தபுரம்: வரதட்சனை கொடுமை தொடர்பான வழக்கில் பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவன் கணவரின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    பிரபல மலையாள நடிகை கவ்யா மாதவனுக்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த சந்திரமோகன் என்பவரின் மகன் நிஷால் சந்திராவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. சில மாதங்களிலேயே கணவரை வி்ட்டு பிரிந்து காவ்யா விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

    அவருடைய புகாரின் பேரில் நிஷால் சந்திரா, மாமனார் சந்திரமோகன், மாமியார் மணி மோகன், சந்திராவின் சகோதரர் தீபக் ஆகியோர் மீது போலீசார் வரதட்சனை கொடு்மை வழக்கு பதிவு செய்தனர்.

    இந்நிலையில் நிஷாவின் குடும்பத்தினர் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் இரு தரப்பு சம்மதத்தின் பேரில் விவகாரத்து பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எனவே போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கில் நேற்று போலீஸ் தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர் நிஷால் சந்திரா குடும்பத்தினர் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் 1 வாரமாகியும் யாரையு்ம் கைது செய்யவில்லை. அதற்குள் பேச்சு வார்த்தை நடத்தி முடிவுக்கு வரலாம். எனவே வழக்கை ரத்து செய்ய தேவையி்ல்லை என்று கூறினார்.

    இதை ஏற்ற நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X