twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குஷ்பு வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு!

    By Shankar
    |

    kushboo
    மேட்டூர்: கற்பு விவகாரத்தில் கருத்து தெரிவித்த குஷ்புவும், அவருக்கு கண்டனம் தெரிவித்த பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளும் சமரசமாகி ரொம்ப நாளாகிறது.

    பாமக, விசி மேடைகளில் நின்று ராமதாஸைப் புகழ்ந்தும், திருமாவளவனைப் பாராட்டியும் குஷ்பு பேசி வருகிறார், அவர்கள் கட்சிகளுக்காக ஓட்டுக் கேட்டு பிரச்சாரமும் செய்துவிட்டார்.

    ஆனாலும் இந்த கற்பு விவகாரத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கு மட்டும் இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டே இருக்கிறது.

    தமிழ் பெண்களின் கற்பு குறித்து, ஒரு வார இதழுக்கு பேட்டியளித்த நடிகை குஷ்பு, பேட்டியில் தமிழ் பெண்களை இழிவுபடுத்தியதாக, பா.ம.க., சேலம் மேற்கு மாவட்ட வக்கீல் அணி செயலர் முருகன், 2005ல், சேலம் மாவட்டம், மேட்டூர் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஸ்ரீதர், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக குஷ்புவுக்கு உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் ஆஜராகாத குஷ்புவுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால், 2005 நவம்பர் 16ல் நேரில் ஆஜரான குஷ்பு, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய குஷ்பு கார் மீது பா.ம.க.,வினர் முட்டை வீசியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    குஷ்பு தொடர்பான இந்த வழக்கு, மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நேற்று விசாரணைக்கு வந்தது. மாஜிஸ்திரேட் பகவதியம்மாள், வழக்கை மே 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    English summary
    The Magistrate of Mettur Judicial court -1 postponed the case against PMK activists in 'throwing egg on actress Kushboo' when she came out of the court in 2005. The case has postponed to May 24th.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X