முதல் மலையாள நடிகை எம்கே கமலம் மரணம்
மலையாள சினிமா உலகின் முதல் நடிகை என்ற பெருமைக்குரிய எம்.கே.கமலம் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 86.
இவர் சேலம் மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனம் 1938-ம் ஆண்டு தயாரித்த பாலன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
வயது மூப்பின் காரணமாக உடல்நலமின்றி இருந்த எம்.கே.கமலம் இன்று மரணமடைந்தார். அவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.
எம்.கே.கமலம் மரணமடைந்ததற்கு கேரள முதல்வர் அச்சுதானந்தன், கலாச்சாரத்துறை மந்திரி எம்.ஏ.பாபி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











