எம்ஜிஆர் மேக்கப்மேன் பீதாம்பரம் மரணம்!

By Shankar

MGR with Peethambaram
மறைந்த தலைவர் எம்ஜிஆரின் மேக்கப்மேனும், இயக்குநர் பீ வாசுவின் தந்தையுமான எம் பீதாம்பரம் நேற்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 89.

கேரளாவைச் சேர்ந்தவர் பீதாம்பரம். வாகினி ஸ்டுடியோவில் உதவி மேக்கப்மேனாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். என் டி ராமாராவுக்கு மேக்கப் போடும் வாய்ப்பு கிடைத்தது. அவரது புகழ்பெற்ற கிருஷ்ணர் வேடத்தைப் போட்டுவிட்டவர் பீதாம்பரம்தான். இந்தி நடிகர் அசோக்குமார், தமிழில் ஜெமினி கணேசன் போன்றவர்களுக்கும் மேக்கப் போட்டவர் இவர்.

ஆனால் மக்கள் திலகம் எம்ஜிஆரைச் சந்தித்தபின் அவரது நிரந்தர மேக்கப்மேனாகிவிட்டார்.

இயக்குநர் பீ வாசு, அவரது இரண்டாவது மகன். ரஜினியுடன் வாசு மிகவும் நெருக்கமாக மாற காரணமாக அமைந்தவர் பீதாம்பரம்தான்.

முரட்டுக்காளையில் ரஜினி ஒரு காட்சியில் கிருஷ்ணராக காட்சி அளிக்க வேண்டும். அந்தக் காட்சிக்கு மேக்கப் போட வந்தார் பீதாம்பரம். உடன் வாசுவும் வந்தார். அப்போது தொடங்கியது ரஜினி - வாசு நட்பு.

பீதாம்பரத்தின் மூத்த மகன் பெயர் வித்யாசாகர். தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க விநியோகஸ்தர். சந்திரமுகி படத்தை விநியோகித்தவர் இவர்தான்.

பீதாம்பரம் மறைவுக்கு தமிழ்த் திரையுகலகம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X