வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மும்பை டி.வி.நடிகை கைது!
மும்பை: தன்னிடம் வீட்டு வேலை செய்த 10 வயது சிறுமிக்கு சூடு போட்டுக் கொடுமைப்படுத்திய மும்பை டிவி நடிகை ஊர்வசி கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் அமராவதி என்ற இடத்திலிருந்த அந்த ஏழைச் சிறுமியை, மும்பையில் படிக்க வைக்கிறேன் என்று அவளது பெற்றோரிடம் சொல்லி நடிகை ஊர்வசி தனோர்க்கர் மும்பை அழைத்து வந்துள்ளார். ஆனால் சொன்னதுபோல் படிக்க வைக்காமல் தன் வீட்டில் வேலைக்காரியாக வைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
சிறுமியின் முகம், கை, கால் மற்றும் பல பாகங்களில் சூடு போட்டுள்ளார் அந்த நடிகை. ஆனால் வெளியில் தெரியாதவாறு அந்தச் சிறுமையை அடைத்தே வைத்திருந்தாராம்.
ஒரு வாரம் கழித்து திடீரென அந்தச் சிறுமி வெளியில் வந்தபோது, அவள் இருந்த மோசமான கோலத்தைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு புகார் செய்துள்ளனர்.
உடனடியாக விரைந்துவந்த மும்பை போலீசார் நடிகையைக் கைது செய்தனர். அவர் மீது சிறுமியை வேலைக்கு வைத்திருந்தது, சிறுவர் மீதான குற்றம் புரிந்தது போன்ற பிரிவுகளின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











