தியேட்டர்களில் விரும்பியபடி படம் திரையிடலாம்!-ராமநாராயணன்
சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஏரியாவை சேர்ந்த திரையரங்க உரிமையாளர்கள், அவர்கள் விருப்பம்போல் படங்களை திரையிடலாம், எந்தத் தடையுமில்லை என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் கூறியுள்ளார்.
விநியோகஸ்தர்களுடனான பிரச்சினை காரணமாக சேலம் மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் 40 திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்க்க சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் தலைவர் ராம நாராயணன் தலைமையில் கூட்டம் கூடியது. இதில்
இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சுமூகமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
குறிப்பிட்ட ஏரியா வினியோகஸ்தர்கள் அந்த ஏரியா எல்லைக்குட்பட்ட எந்த திரையரங்கிலும் அவர்கள் விருப்பம் போல் படங்கள் திரையிடலாம். அவர்களை திரையரங்க உரிமையாளர்கள் கட்டுப்படுத்தக் கூடாது, என முடிவு செய்யப்பட்டது.
அதேபோல், சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய ஏரியா திரையரங்க உரிமையாளர்கள் அவர்கள் விருப்பம் போல் திரைப்படங்கள் திரையிடலாம் அவர்களை குறிப்பிட்ட ஏரியா வினியோகஸ்தர்கள் கட்டுப்படுத்தக்கூடாது.
இனி வரும் காலங்களில் இருசாராரும் இணைந்து செயல்படுவது என்றும், ஏதேனும் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் இரு தரப்பினரும் அமர்ந்து பேசி சுமூகமாக முடிவெடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று முதல் சர்வம், ராஜாதிராஜா, பசங்க படங்களை இப்பகுதிகளில் திரையிடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications











