twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வசனகர்த்தா பிரசன்னகுமார் மரணம்

    By Staff
    |

    திரைப்பட வசனகர்த்தா என்.பிரசன்ன குமார் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 49. கணையத்தில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக அவர் நீண்டநாட்களாக அவதிப்பட்டு வந்தார்.

    கும்பகோணத்தைச் சேர்ந்த பிரசன்னகுமார், கல்லூரி நாட்களிலிருந்தே சினிமா, நாடகம் என ஆர்வத்துடன் இருந்தவர். யாரிடமும் உதவியாளராக இல்லாமல் நேரடியாகவே திரைப்படத்துறைக்கு வந்த இவர் இதுவரை 100 திரைப்படங்களுக்கு மேல் வசனம் எழுதியுள்ளார். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, யூத் போன்ற பல ஹிட் படங்களில் இவரது பங்களிப்பும் இருந்தது.

    நடிகர் தியாகு இவரது நெருங்கிய நண்பர். தியாகுதான் இவரை இயக்குநர்கள் ராபர்ட்-ராஜசேகரனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் விளைவு பாலைவனச்சோலை திரைப்படத்தில் முதன்முதலாக வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது பிரசன்னகுமாருக்கு. இவர் கடைசியாக வசனம் எழுதிய படம் இன்று வெளியாகும் 'சண்ட'.

    விவேக்கின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். விவேக் நடித்த தை பொறந்தாச்சு, பட்ஜெட் பத்மநாபன் போன்ற 50-க்கும் மேற்பட்ட படங்களில் இவர்தான் நகைச்சுவைப் பகுதியை எழுதினார். கிட்டத்தட்ட விவேக்கின் ஆஸ்தான வசனகர்த்தாவாகவும் விளங்கி வந்தார்.

    அதேபோல இயக்குநர் லிங்குச்சாமியின் ஆஸ்தான வசனகர்த்தாவாகவும் விளங்கினார். அவரது அனைத்துப் படங்களிலும் பிரசன்னாதான் வசனம் எழுதியுள்ளார்.

    மாநில அரசின் விருதினையும் பெற்றுள்ளார் பிரசன்ன குமார்.

    25 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வந்த பிரசன்னகுமாருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

    இறுதிச் சடங்குகள் இன்று கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் நடக்கின்றன.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X