இன்றைய ரிலீஸ்... ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி, கபடம்!
இந்த வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் மூன்று நேரடி தமிழ்ப் படங்கள் மற்றும் ஒரு பிரமாண்ட ஆங்கிலப் படம்.
கபடம், ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி, தொட்டால் விடாது ஆகிய தமிழ்ப் படங்களும், எக்ஸ்பான்டபிள்ஸ் 3 ஆங்கிலப் படமும் வெளியாகியுள்ளன.

கபடம்
சோழா பொன்னுரங்கம் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஜோதி முருகன் என்பவர் இயக்கியுள்ளார். சச்சின், அங்கனா ராய், ஆதித்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி
கே பாலச்சந்தர் ஆசியுடன் அவரது மகள் புஷ்பா கந்தசாமி ராஜம் புரொடெக்ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ள படம் இது. பரத் - நந்திதா ஜோடி. தம்பி ராமய்யா உள்பட ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர். எல்.ஜி.ரவிசந்தர் இயக்கியுள்ளார்.

தொட்டால் விடாது
அஜித் ரவி பிகாசஸ், சனம் பிரசாத் உள்ளிட்டோர் நடித்துள்ள, பெரிதாக வெளியில் தெரியாத படம் இந்த தொட்டால் விடாது. அஜித் ரவி பிகாசஸ்தான் படத்துக்கு இயக்குநரும்.

எக்ஸ்பான்டபிள்ஸ் 3
சில்வஸ்டர் ஸ்டெலோன், அர்னால்ட் உள்பட பல பிரபலங்கள் மூன்றாவது முறையாக ஒன்றிணைந்துள்ள படம் எக்பான்டபிள்ஸ் 3. ஏற்கெனவே வெளியான இரு பாகங்களும் பெரும் வெற்றி பெற்றன. ஹாலிவுட்டில் கடந்த வாரமே வெளியாகிவிட்டது. இந்தியாவில் இன்றுதான் வெளியாகிறது. தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











