கொலை மிரட்டல் வழக்கில் வனிதாவுக்கு முன்ஜாமீன்!

நடிகை வனிதாவுக்கும், முன்னாள் கணவர் ஆகாசுக்கும் இடையே மகன் விஜய் ஸ்ரீஹரியை யாரிடம் வைத்திருப்பது என்று தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த 18-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்காக வனிதா நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது நீதிமன்றத்துக்கு வெளியே ஆகாஷ் வக்கீல் சசிகுமாரை வனிதா தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வக்கீல் சசிகுமார் சென்னை உயர்நீதிமன்ற போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக வனிதா, அவரது 2-வது கணவர் ஆனந்தராஜன், ஜாகீர்உசேன் ஆகிய 3 பேர் மீதும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் வழக்கில் வனிதா உள்பட 3 பேரும் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
நீதிபதி அருணா ஜெகதீசன் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. வனிதாவுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று வக்கீல் சசிகுமார் எதிர்ப்பு தெரிவித்து பதில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











