கணவர் பல கோடி மோசடி-விஜயநகர மன்னர் வாரிசு போலீசில் புகார்!

சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் போட்கிளப் ரோடு பகுதியை சேர்ந்தவர் வித்யா சிங் (வயது 57). இவர் நேற்று தனது மகளுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், "நான் ஆந்திர மாநிலம் விஜயநகரைச் சேர்ந்தவள். விஜயநகர மன்னர் பரம்பரையில் பிறந்த நான், சென்னையில்தான் படித்து வளர்ந்தேன். 83-ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது.
எனது கணவர் 12-பி, லேசாலேசா ஆகிய தமிழ் படங்களைத் தயாரித்தார். தற்போது அச்சம் தவிர் என்ற படத்தையும் எடுத்து வந்தார். அந்த படம் பாதியில் நிற்கிறது. அவர் படம் தயாரிப்பதற்காக எனது தங்க,வைர நகைகள் மற்றும் சொத்துக்களை விற்றுப் பணம் கொடுத்தேன். அந்த வகையில் பல கோடி பணத்தை அவர் என்னிடம் இருந்து வாங்கினார்.
இந்த நிலையில் எனது கணவரை திடீரென்று காணவில்லை. அவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு, வாழ்வதாக அறிகிறேன். அவர் மீது சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளேன்.
எனது சொத்துக்களை அபகரித்துக் கொண்டு, தற்போது வேறொரு பெண்ணுடன் வாழும் எனது கணவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளேன்..", என்றார்.
இந்த புகார் மனு மீது தேனாம்பேட்டை உதவி போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











