அடகடவுளே.. 22 வயதில் விபரீத முடிவு.. மன அழுத்தத்தால் தூக்கிட்டு த•கொலை செய்து கொண்ட சீரியல் நடிகை!
மும்பை: 22 வயதே ஆன நடிகை சஞ்சிதா உகலே நளசோபரா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்ட தற்கொலை சய்து கொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் இந்த விபரீதமான முடிவை எடுத்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விக்கி கௌஷலின் Chhaava திரைப்படத்திலும் மனோஜ் பாஜ்பாயின் 'சைலன்ஸ் 2' ஆகிய படங்களில் நடித்து இருக்கு நடிகை சஞ்சிதா உகலே படவாய்ப்பு இல்லாததாலும், மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் வந்து கதவை திறந்த போது சஞ்சிதா உகலே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். போலீஸார் சஞ்சிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்தில் எந்தவித சந்தேகத்திற்குரிய பொருட்களோ, தற்கொலை கடிதமோ இல்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தோழி கண்ணீர்: நடிகை சஞ்சிதாவின் நெருங்கிய தோழியும் நடிகையுமான மேகா சர்மா, இந்த மரணம் குறித்து கண்ணீர் மல்க அளித்துள்ள பேட்டியில், நான் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை, என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சஞ்சிதாவுக்குச் சில உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே அவள் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தாள். அவள் எப்போதும் கலகலப்பாக இருப்பாள். 10 நாட்களுக்கு முன்பு கூட அவளை நான் ஒரு ஆடிஷனுக்கு அழைத்துச் சென்றேன். நிச்சயம் என்னால் இந்தத் திரையுலகில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தாள், ஆனால், கடைசியில் இப்படி ஒரு முடிவை எடுப்பாள் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லை என்றார்.
கடைசி வீடியோ: சஞ்சிதா தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், இன்ஸ்டாகிராமில் 'டஃப்லி வாலே'என்ற பிரபலமான இந்தி பாடலுக்குத் துள்ளலாகப் பாடி எக்ஸ்பிரஷன் கொடுக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதைப்பார்த்த ரசிகர்கள், இவ்வளவு கலகலப்பாக வீடியோ வெளியிட்டுவிட்டு, அடுத்த சில மணி நேரங்களில் இப்படி ஒரு முடிவை எடுப்பாரா? நம்ப முடியாமல் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications