22 Years of Heyram : பணம் தான் முக்கியம் என்றால்.. ஹேராம் எடுத்திருக்க மாட்டேன்.. கமலின் நினைவலை!
சென்னை : பணம் தான் முக்கியம் என்று நினைத்து இருந்தால் ஹேராம் எடுத்திருக்க மாட்டேன் என கமல்ஹாசன் பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வித்தியாசமான கதைகளை தேடி பிடித்து நடித்து வரும் கமல்ஹாசனின் ஹேராம் திரைப்படம் ஒரு மறக்க முடியாத திரைப்படமாகும்.
கமல்ஹாசன், ஷாருக்கான் நடிப்பில் ஹே ராம் படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் ஆகிறது. இந்த திரைப்படம் வெளியான போது, பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. காலம் கடந்தும் கொண்டாடப்படும் மிக முக்கிய படைப்பு ஹேராம் திரைப்படமாகும்.

கமலஹாசன்
கருப்பு வெள்ளை சினிமா காலம் தொடங்கி டிஜிட்டல் சினிமா காலம் வரை திரை உலகில் கமலஹாசன் நிலைத்திருக்கும் சாதனைகள் ஏராளம் தமிழ் கதாசிரியர் கவிஞர் வசனகர்த்தா பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக இருந்து வருகிறார்.

பிக் பாஸில்
வெள்ளித்திரையில் மட்டும் ஜொலித்துக் கொண்டிருந்த கமல், பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் மனதில் மேலும் நெருக்கமாகி விட்டார். விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை 5வது முறையாக தொகுத்து வழங்கினார். தற்போது, ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் அவரே தொகுத்து வழங்கி வருகிறார். அரசியலில் பிஸியாக இருந்தாலும், கலைத்துறையில் தொய்வின்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

பணம் தான் முக்கியம் என்றால்
இந்நிலையில், ஹேராம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதை கொண்டாடும் வகையில், கமல்ஹாசன் பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், பணம் தான் முக்கியம் என்றால் நான் ஹேராம் எடுத்திருக்கமாட்டேன், நான் பெருமளவு பணத்தை இழந்திருக்கிறேன் ஆனால் அது ஒரு பொருட்டல்ல, திரும்ப பெற முடியாத ஒன்று தான் இழப்பு தாயை இழப்பது தான் இழப்பே தவிர பணம் உங்களால் திரும்ப பெற முடியும் என ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

விக்ரம்
கமல் ஹாசன் தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவாணி நாராயணன், சந்தான பாரதி, மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்ரம் ஷுட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. விரைவில் இப்படடித்தின் ரிலீஸ் தேதி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











