பார்த்தேன் ரசித்தேன் 22 ஆண்டு கொண்டாட்டம்..லைலாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரசாந்த்!

சென்னை : பார்த்தேன் ரசித்தேன் திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் முடிவடைந்துள்ளதை அடுத்து, லைலாவுக்கு பிரசாந்த் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

2000ம் ஆண்டு சரண் இயக்கத்தில் பிரசாந்த், சிம்ரன், லைலா, ரகுவரன் நடிப்பில் வெளியானத் திரைப்படம் பார்த்தேன் ரசித்தேன்

ஷெரீன் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் திரையரங்கில் பல நாட்கள் ஓடி பட்டையை கிளப்பியது. இத்திரைப்படத்தில் சிம்ரன் வில்லியாகவும் நடித்து மிரட்டி இருப்பார்.

பார்த்தேன் ரசித்தேன்

பார்த்தேன் ரசித்தேன்

படத்தின் பெயருக்கு ஏற்றார் போல இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்த்து பார்த்து ரசிக்கும் படி இருக்கும். பேருந்தில் பயணிக்கும் பிரசாந்த் மற்றும் லைலா இருவரும் கண்களால் பார்த்து பார்த்தே காதலை வளர்க்கிறார்கள். பிரசாந்தின் தோழி சிம்ரன் பிரசாந்தை ஒருதலையாக காதலிக்கிறாள். பிரசாந்த் தன் காதலை, லைலாவிடம் சொல்ல வரும் நேரத்தில் சிம்ரன் புகுந்து குட்டையை குழப்பி இருவரையும் பிரித்துவிடுவார்.

சிம்ரன் வில்லி

சிம்ரன் வில்லி

இப்படத்தில் சிம்ரன் வில்லியாகவும் நடித்திருப்பார், இடுப்பை மட்டும் காட்டும் நடிகை அல்ல வில்லித்தனமாக நடிப்பும் தனக்கு வரும் என்பதை நிரூபித்தார். இப்படம் வெளியான பின், தமிழ் சினிமாவில், சிம்ரனின் ஆளுமை அதிகரித்து இருந்தது. கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி படங்களுக்கு பின், இப்படத்தில், பிரசாந்த் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்தனர்.

அனைத்து பாடல்களும் ஹிட்

அனைத்து பாடல்களும் ஹிட்

பரத்வாஜ் இசையில், எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ, பார்த்தேன் பார்த்தேன் ரசித்தேன் ரசித்தேன், கிடைக்கலை கிடைக்கலை, பூவே புன்னகை தின்னாதே என படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. விமர்சனம் மற்றும் வசூலில் வெற்றி பெற்ற இப்படம், தெலுங்கிலும், நா மனசிஸ்த ரா என, ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

22yrsOfParthenRasithen

22yrsOfParthenRasithen

இந்நிலையில், பார்த்தேன் ரசித்தேன் திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகளாகி உள்ளதை கொண்டாடும் வகையில், லைனா தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துக்கொண்டு இருந்தார். அப்போது,திடீரென தொகுப்பாளினி போனிலிருந்து பிரசாந்திற்கு போன் செய்து, நான் யார் தெரிகிறதா என கேட்டார் அதற்கு பிரசாந்த் தெரியல யார்னு சொல்லுங்க.. யார்னு சொல்லுங்க என கேட்டுக்கொண்டே இருந்தார்.

ரொமான்ஸே வரல

ரொமான்ஸே வரல

இதையடுத்து, லைலாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் திடீரென லைலா முன் நின்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து, பார்த்தேன் ரசித்தேன் திரைப்படத்தில் நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து இருவரும் பேசினர். அப்போது, இந்த படம் ஒரு ரொமான்டிக்கான படம், இந்த படத்தில் லைலாவை பார்த்து ரொல்மான்ஸ் வரவே இல்லை, ஏன்னா எப்போதுமே சிரிச்சிக்கிட்டே இருப்பா. ரொமான்சா ஒரு லுக்குவிடலாம்னு பார்த்தா சிரிச்சி அந்த லுக்கை கேட்டுத்துடுவா என்று பிரசாந்த் கலகலப்பாக பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X