22 வருஷம் கடந்த காதல் மன்னன்… பெண்கள் சுற்றும் பேரழகன்.. டிரெண்டாகும் #22YearsOfKadhalMannan!
சென்னை: தல அஜித்தின் வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் கசிந்து வைரலான நிலையில், இன்று, காதல் மன்னன் படம் 22 ஆண்டுகள் கடந்ததை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Recommended Video
மார்ச் 6, 1998ம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளியான காதல் மன்னன் திரைப்படம் இன்றுடன் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
அந்த படத்தில் இடம்பெற்ற உன்னை பார்த்த பின்பு நான் உள்ளிட்ட பல பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக இருக்கிறது.
டிரெண்டிங்
சிவா - திலோத்தமா இந்த காதல் ஜோடியை தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். துரத்தி துரத்தி ஒரு பெண்ணை காதலித்து, அவளையும் காதலிக்க வைக்கும் இளைஞனாக தல அஜித் இந்த படத்தில் தனது காதல் லீலைகளை கட்டு அவிழ்த்திருப்பார். #22YearsOfKadhalMannan என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ரொமான்டிக் ஹீரோ
கோட் சூட் போட்டு, பில்லாவாக மாஸ் காட்டும் தல அஜித்தை விட, காதல் மன்னன் சிவாவாக நடித்த ரொமான்டிக் அஜித்தை தான் பெண்களுக்கு இன்றளவும் மிகவும் பிடிக்கும். காதல் கோட்டை, காதல் மன்னன், பூவெல்லாம் உன் வாசம் என பல காதல் படங்களில் சாக்லேட் பாயாக நடித்து அஜித் அசத்தியிருப்பார்.
திலோத்தமாவை மறக்கமுடியுமா
காதல் மன்னன் படத்தில் திலோத்தமாவாக நடித்த நடிகை மானுவை தமிழ் ரசிகர்கள் எப்போதுமே மறக்க மாட்டார்கள். காதல் மன்னன் படத்தில் காட்சிக்கு காட்சி அழகு பதுமையாக வலம் வந்த திலோத்தமாவை பார்த்து, "உன்னை பார்த்த பின்பு நான்.. நான் ஆக இல்லையே" என தல அஜித்தை போல தமிழ் நாட்டில் பல இளைஞர்கள் பாடியது எல்லாம் அழகான குட்டி கதை.
அரிதான விளம்பரம்
இயக்குநர் சரண் இயக்கத்தில் அஜித், மானு, விவேக், எம்.எஸ். விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான காதல் மன்னன் படத்தின் அரிதான பேப்பர் விளம்பரத்தை தல ரசிகர்கள் பொக்கிஷமாக வைத்து, தற்போது, டிரெண்டாகி வரும் ஹாஷ்டேக்கில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
இயக்குநர் சரண்
காதல் மன்னன் படத்தின் மூலம் நடிகர் அஜித்குமாரை இயக்கிய சரண், அடுத்ததாக அமர்களம் எனும் மற்றொரு பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தார். இந்த படத்தில் நடித்த போது தான் ஷாலினியுடன் காதல் ஏற்பட்டு, அஜித் - ஷாலினி திருமணம் நடந்தது. மேலும், அட்டகாசம், அசல் உள்ளிட்ட தல அஜித் படங்களையும் இயக்குநர் சரண் இயக்கி உள்ளார்.

வலிமை அப்டேட்
காதல் மன்னன் படம் வெளியாகி இன்றோடு 22 ஆண்டுகள் நிறைவடைந்ததை தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளிலாவது வலிமை படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைக்குமா? என தல ரசிகர்கள் தொடர்ந்து ட்விட்டரில் தயாரிப்பாளர் போனி கபூரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். பார்த்து செய்யுங்க பாஸ்!


Click it and Unblock the Notifications











