கத்ரீனா விளம்பரத்தில் ஸ்லம்டாக் மில்லியனேர் பாடல்... ஏ ஆர் ரஹ்மான் வழக்கு

By Shankar

A R Rahman
மும்பை: ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தில் தான் இசையமைத்த பாடலை கத்ரீனா கைப் தோன்றும் விளம்பரத்தில் பயன்படுத்தியதை எதிர்த்து வழக்கு தொடரவுள்ளார் ஏஆர் ரஹ்மான்.

பிரபல இந்திய நடிகை கத்ரினாகைப் நடித்த விளம்பர படமொன்று சமீபத்தில் ரிலீசானது. இதில் ஸ்லம்டாக் மில்லினர் பாடலை பயன்படுத்தி இருந்தனர்.

இந்த விளம்பரத்தை பார்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அதிர்ச்சியடைந்தார். காரணம், பாடலின் முழு உரிமையும் ரஹ்மானிடம்தான் உள்ளது.

இதை எந்த வகையில் பயன்படுத்த வேண்டும் என்றாலும் அவரது அனுமதி அவசியம். ஆனால் கத்ரீனா விளம்பரத்தை உருவாக்கியவர்கள் எந்த அனுமதியும் பெறவில்லை.

இதையடுத்து அந்த விளம்பரத்துக்கு எதிராக வழக்கு தொடர ஏ.ஆர்.ரஹ்மான் முடிவு செய்துள்ளார். இதுபற்றிய சட்ட விவகாரங்களை கவனிக்கும்படி தனது வக்கீல்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ரஹ்மான் தரப்பில் இதுபற்றி கூறும்போது, "விளம்பர படத்தை தயாரித்தவர்களிடம் எனது வக்கீல்கள் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு வருகிறார்கள். விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கை கத்ரீனாவுக்கு எதிரானதல்ல. காபிரைட் உரிமையை மீறும் வகையில் இந்த விளம்பரம் தயாரித்தவர்கள் மீதுதான்.." என்றனர்.

கத்ரினாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் ஏற்கனவே ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்ட ஆல்பம் ஒன்றில் இணைந்து பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X