தமிழுக்கு வரும் ஜூனியர் என்டிஆர்!

அதை நிறைவேற்றி வைத்திருக்கிறார் பிரபல தமிழ் - தெலுங்கு தயாரிப்பாளரான அஸ்வினி தத். ஏராளமான வெற்றிப் படங்களைத் தந்த வைஜெயந்தி மூவீஸ், இப்போது ஜூனியர் என்டிஆரை வைத்து ஓம் சக்தி என்ற படத்தை எடுத்து வருகிறது.
18 சக்திகள் என புராணங்களில் கூறப்படும் விஷயத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளனராம். ரமேஷ் மெஹர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், இலியானா நாயகியாக நடித்துள்ளார்.
ஓம் சக்தி படத்தின் தமிழ் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இயக்குநர்கள் பி வாசு, கே எஸ் ரவிக்குமார், நடிகர் பிரபு உள்பட பலரும் விழாவுக்கு வந்து வாழ்த்தினர்.
தயாரிப்பாளர் அஸ்வினி தத் கூறுகையில், "தமிழில் இருந்துதான் நான் தெலுங்குக்குப் போய் படங்கள் தயாரித்தேன். சென்னையில் இருந்த போது 20 படங்களுக்கு மேல் எடுத்தேன். இப்போது மீண்டும் தமிழ் சினிமா எடுக்க வந்துள்ளேன். ஜூனியர் என்டிஆர் நன்றாக தமிழ்க் கற்றுக் கொண்டுள்ளார். அவர் தமிழிலேயே பேசி எடுத்துள்ள படம் இது," என்றார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன், தனது தேனான்டாள் பிலிம்ஸ் மூலம் ஓம் சக்தியை வெளியிடுகிறார்.


Click it and Unblock the Notifications











