தியேட்டர்களில் கிரிக்கெட்...அலறும் விநியோகஸ்தர்கள் சங்கம்!

By Staff

தமிழக தியேட்டர்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பக் கூடாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது சினிமா விநியோகஸ்தர்கள் சங்கம்.

இதுகுறித்து விவாதிக்க விநியோகஸ்தர்கள் சங்க அவசர கூட்டம் வருகிற 27ம் தேதி நடக்கிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் (மார்ச்) 12ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25ம் தேதி வரை நடக்கிறது. சென்னையில் மட்டும் 7 ஆட்டங்கள் நடக்கின்றன.

இப்போட்டிகளை தியேட்டர்களில் அகன்ற திரையில் ஒரு திரைப்படம் போல பார்த்து மகிழ்வதை ரசிகர்கள் மிகவும் விரும்புகிறார்கள். அதைவிட முக்கியம், தியேட்டர்கள் முழுவதுமாக இளைஞர் கூட்டத்தால் நிரம்பி வழியும்... நல்ல கலெக்ஷன் தேறும்.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சில திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டபோது நிறையபேர் பார்த்தார்கள். சினிமா டிக்கெட் விலைக்கே இந்த போட்டிகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எனவே ரசிகர்களின் வரவேற்பின் அடிப்படையில், இப்போட்டிகளை இந்தாண்டும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் 100 தியேட்டர்களில் ஒளிபரப்பப்படுகிறது. இதுவரை 75 தியேட்டர்களில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

சென்னையில் ஐநாக்ஸ், பைலட், பேபி ஆல்பர்ட், அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பி.வி.ஆர். போன்ற தியேட்டர்களில் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விஷயம் வெளியானதும் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய 4 மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தியேட்டர்களில் கிரிக்கெட்டை ஒளிபரப்பக்கூடாது என்று கர்நாடக திரைப்பட சங்கத்தினரும் அரசிடம் வற்புறுத்தியுள்ளனர். போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்கள் தணிக்கை செய்யப்பட்ட பிறகே தியேட்டர்களில் திரையிடப்பட வேண்டும் என்று சட்டம் உள்ளது. தணிக்கை செய்யப்படாத கிரிக்கெட் போட்டிகளை தியேட்டர்களில் காட்டுவது சட்டப்படி தவறு என்று தயாரிப்பாளர் ஒருவர் வாதம் செய்ய ஆரம்பித்துள்ளார் (அப்படியெனில் ஆடியோ விழா போன்ற தணிக்கை செய்யாத விழாக்களை எப்படி தியேட்டர்களில் நடத்துகிறார்கள்?)

இதற்கிடையில் தமிழக திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்களின் அவசர கூட்டம் வருகிற 27ம் தேதி நடக்கிறது. சங்கத்தின் தலைவர் பரசுராமன் தலைமை வகிக்கிறார்.

இக்கூட்டத்தில் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் தியேட்டர்கள் மீதான கடும் நடவடிக்கைகள் அறிவிக்கப்படுமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X