ரஹ்மானுக்கு திரையுலகம் பாராட்டு விழா!

By Staff

AR Rahman
இரு ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ள ஏஆர் ரஹ்மானுக்கு தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமானால் தமிழ் திரையுலகம் பெருமை அடைந்துள்ளது. தமிழர்கள் தலைமை நிமிர்ந்து நிற்கிறார்கள். உலக அளவில் தமிழன் புகழை கொண்டு சென்ற முதல் தமிழர் அவர். இளைஞர்களுக்கு வழி காட்டியாக அவர் மாறியுள்ளார்.

இவ்வளவு பெருமையிலும் ஆஸ்கார் விருது பெறும் போது அவர் காட்டிய அடக்கமும் எளிமையும் மெய்சிலிர்க்க வைத்தது. அந்த மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லி தமிழை மறக்காமல் பேசி இருப்பது நமக்கெல்லாம் பெருமை அளிப்பதாகும். அவரால் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறான்.

அந்த மாபெரும் தமிழனுக்கு தமிழ் திரையுலகம் தந்த கலைஞனுக்கு சென்னையில் விரைவில் தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப் படும். திரையுலகில்உள்ள அனைத்து பிரிவினரும் சேர்ந்து இவ்விழாவை நடத்துவார்கள்.

பிரமாண்ட வரவேற்பு!:

மேலும் ஆஸ்கர் விருது பெற்று தாய்நாடு திரும்பும் ரஹ்மானுக்கு சென்னை மீனம்பாக்கத்தில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கவும் திரையுலகம் திட்டமிட்டுள்ளது. திரையுலகைச் சாராத சில அமைப்புகளும், தாங்களும் இந்த நல்ல நிகழ்வில் பங்கேற்க விரும்புவதாக அறிவித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X