சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகளுக்கு தடை இல்லை!

திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க தடை விதிப்பது, திரைப்பட இயக்குநர்களின் அடிப்படை பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை தடுக்கும் செயல் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறுவதற்கு கடந்த 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் தடை விதித்து மத்திய சுகாதாரத்துறை விதிமுறையை வகுத்தது.
இதை எதிர்த்து பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் மத்திய அரசு மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல், இந்த உத்தரவு சட்டவிரோதமானது.
திரைப்படக் கலை என்பது கிரியேட்டிவ் விஷயமாகும். இதில் யாரும் தலையிட முடியாது. அப்படித் தலையிட்டால் அது அடிப்படை கருத்துரிமை மற்றும் பேச்சுரிமையை தடை செய்யும் செயலாகும் என்றார்.
Comments
இந்தியா சினிமா டெல்லி உயர்நீதிமன்றம் தடை தள்ளுபடி புகை பிடிக்கும் காட்சி cinema delhi hc quashed smoking


Click it and Unblock the Notifications