சர்வதேச இந்திய திரைப்பட விழா கோலாகலமாக தொடக்கம்

By Staff

IFFI 2008
39வது சர்வதேச இந்திய பட விழா (இஃபி -2008) கோவா தலைநகர் பனாஜியில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. நடிகை ரேகா குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

பனாஜியில் உள்ள கலா அகாடமியில் தொடக்க விழா நடைபெற்றது. தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகை ரேகா குத்து விளக்கேற்றி வைத்தார். அவர் குத்து விளக்கேற்ற தெலுங்கு இளம் நடிகையும், கோவாவைச் சேர்ந்தவருமான இலியானா உதவினார்.

கோவா ஆளுநர் சித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் அனந்த் சர்மா, கோவா முதல்வர் திகம்பர் காமத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பட விழாவின் தொடக்கமாக ஹாங்காங் இயக்குநர் பீட்டர் சான் இயக்கிய வார்லார்ட்ஸ் திரையிடப்பட்டது. 1850ம் ஆண்டில் நடந்த தைபிங் புரட்சியை அடிப்படையாகக் கொண்ட படம் இது.

10 நாள் விழா

10 நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்தப் பட விழாவில் 30 நாடுகளைச் சேர்ந்த 225 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

உலக சினிமா பிரிவில் 60 திரைப்படங்கள் இடம் பெறுகின்றன.

வெளிநாடுகளில் இந்தியப் படங்கள் என்ற பிரிவின் கீழ், என்.ஆர்.ஐ. திரைப்பட இயக்குநர்களின் படங்கள் இடம் பெறுகின்றன.

இந்தியப் பட பிரிவில்,26 பொழுதுபோக்குப் படங்கள் மற்றும் 21 நான் பீச்சர் படங்கள் என மொத்தம் 47 திரைப்படங்கள் இடம் பெறுகின்றன.

இதுதவிர திலீப் குமார், லதா மங்கேஷ்கர், சரோஜா தேவி, தபன் சின்ஹா ஆகியோரை கெளரவிக்கும் வகையில், அவர்களது திரைப்படங்கள், பாடல் காட்சிகள் திரையிடப்படும்.

கோவா பட விழாவின் முக்கிய அம்சம், தாஜ் மஹால் குறித்த நான்கு திரைப்படங்கள் இடம் பெறுவதுதான். 1928ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டுகளுக்கு இடையில் தயாரிக்கப்பட்டவை இவை.

கன்ட்ரி போகஸ் பிரிவின் கீழ் ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஈரான் ஆகிய நாட்டுப் படங்கள் இடம் பெறுகின்றன.

ரெட்ரோஸ்பெக்டிவ் பிரிவின் கீழ் அகில கரிஸ்மாகி, ஜான் லான்டிஸ், வோங் கார் வாய் ஆகியோரது படங்கள் இடம் பெறுகின்றன.

சர்வதேச இந்தியப் பட விழாவையொட்டி பனாஜி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஹோட்டல்கள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. பன்னாட்டுத் திரையுலகினர் குவிந்துள்ளதால் பனாஜியே கலர்ஃபுல்லாக மாறியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X