அனுஷ்கா, நாகார்ஜுனா வீ்டுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!!
ஹைதராபாத்: பிரபல தமிழ் - தெலுங்கு நடிகை அனுஷ்கா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
ஆந்திராவின் கடலோர நகரமான விசாகப்பட்டினத்தில் முக்கிய இடம் ஒன்றை திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் வாங்கியதாக கூறப்பட்டதையடுத்து நடிகை அனுஷ்கா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் வசிக்கும் பஞ்சாரா ஹில்ஸ், ஜுபிலி ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் வருமான வரித்துறையினர் இன்று காலை சோதனை மேற்கொண்டனர்.
முன்னணி தெலுங்கு நடிகர்கள் நாகர்ஜுனா, ரவி தேஜா, தயாரிப்பாளர் சிவ பிரசாத் ரெட்டி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது.
இதில், கணக்கில் வராத பல சொத்துக்கள் விற்றது மற்றும் வாங்கியது தொடர்பாக சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், முன்கூட்டியே வரி செலுத்தியதிலும் சில திரையுலக பிரமுகர்கள் தவறான கணக்குகளைத் தந்து ஏமாற்றியுள்ளதும் தெரியவந்தது.
இந்த சோதனையால் ஹைதராபாத் நகரமே இன்று பரபரப்பாகிவிட்டது.


Click it and Unblock the Notifications











