குரோவர் உடலை 4 மணி நேரம் வெட்டினோம் - நடிகை மோனிகா

இதுதொடர்பாக இருவரும் பேசிக் கொண்ட உரையாடல் விவரமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னடத்தில் நடித்து வரும் இளம் நடிகை மரிய மோனிகா சூசைராஜ். இவரது காதலர் மாத்யூ. இவர் கொச்சியில் கடற்படைத் தளத்தில் பொறியாளராக இருக்கிறார்.
இருவரும் சேர்ந்து சினர்ஜி ஆட்லேப்ஸ் என்கிற தனியார் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரியான நீரஜ் குரோவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொலை செய்து முடித்த பின்னர் மரியாவும், மாத்யூவும் பேசிக் கொண்ட உரையாடல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் சேர்ந்து குரோவர் உடலை நான்கு மணி நேரமாக துண்டு துண்டாக வெட்டி சிதைத்துள்ளனர் என்ற விவரம் அதில் அடங்கியுள்ளது.
குரோவரைக் கொலை செய்த பின்னர் ஜெரோமிடம் மரியா கூறுகையில், உடலை எங்கு போய் போடுவது, நாம் உடலுடன் செல்வதை யாராவது பார்த்து விட்டால் என்னாவது என்கிறார்.
அதற்கு ஜெரோம், உடலை பல துண்டுகளாக வெட்டி விடுவோம். பின்னர் ஒரு பையில் துண்டுகளைப் போட்டு அடைத்து அதை எங்காவது போட்டு விடுவோம். நம்மை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று ஜெரோம் கூறுகிறார்.
உடலை துண்டு துண்டாக வெட்டி மரியா, மாத்யூவுக்கு நான்கு மணி நேரம் பிடித்ததாம்.
தொடர்ந்து மரியாவிடம், மும்பை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











