twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எப்ஐசிசிஐ-யின் மீடியா மாநாட்டுக்கு கமல்ஹாசன் தலைவர்

    |

    Kamal Hassan
    இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் (எப்ஐசிசிஐ) சார்பில் சென்னையில் நவம்பர் 18ம் தேதி தொடங்கி 2 நாள் நடைபெறும் ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறை என்ற தலைப்பிலான மாநாட்டுக்கு கலைஞானி கமல்ஹாசன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திரைத் துறையின் சகல பிரிவுகளிலும் தனது முத்திரையை ஆழமாக பதித்துள்ள கமல்ஹாசன், முதல் முறையாக எப்ஐசிசிசிஐயின் மாநாடு ஒன்றுக்குத் தலைமை தாங்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    திரைத் துறையைச் சேர்ந்த ஒருவருக்கு எப்ஐசிசிஐ கொடுத்துள்ள முதல் கெளரவமும் இது என்பது முக்கியமாக குறிப்பிடத்தக்கதாகும்.

    உலகளாவிய ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் முன்பு நமது நாட்டின் பொழுதுபோக்குத் துறையின் திறமைகளை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில், எப்ஐசிசிசஐயின் இந்த முதலாவது வித்தியாசமான முயற்சியில் நான் இடம் பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    இந்த மாநாட்டில், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த ஊடகப் பிரதிநிதிகள், நிபுணர்கள், திரையுலகினர் கலந்து கொள்ளவுள்ளனர். வெளிநாடுகளைச் சேர்ந்த ஊடகப் பிரதிநிதிகள், நிபுணர்கள், திரைத் துறையினரும் பங்கேற்கவுள்ளனர்.

    மத்திய, மாநில அரசுகளுடன் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இந்த மாநாட்டில் அலசப்படவுள்ளது.

    மேலும் திரைத் துறையினர் சந்தித்து வரும் பிரச்சினைகள், அவர்களின் கோரிக்கைளையும் இந்த மாநாட்டின் மூலமாக மத்திய அரசுக்குக் கொண்டு செல்லவுள்ளனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X