சென்னையில் ஆசின் உதவியாளர் முத்துக்குமார் பதுங்கல் - போலீஸ் சந்தேகம்

By Staff

Asin with Nalla Muthukumar
சென்னை: காணாமல் போய் விட்டதாக கூறப்படும் நடிகை ஆசினின் முன்னாள் உதவியாளர் நல்லமுத்துக்குமார் சென்னையில் பதுங்கியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆசினிடம் டச் அப் உதவியாளராக இருந்து வந்தவர் முத்துக்குமார். இவரை காணவில்லை என்றும், தனது மகனை ஆசினும், அவரது தந்தை ஜோசப்பும் பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறி முத்துக்குமாரின் தாயார் சுடலைவடிவு சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியிடமும் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து தனிப்படைகளை அமைத்து முத்துக்குமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுவரை போலீஸ் வேட்டையில் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. ஆனால் முத்துக்குமார் சென்னையில்தான் பதுங்கியிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

குறிப்பாக தனது திரைத் துறை நண்பர்களின் வீடு ஏதாவது ஒன்றில் முத்துக்குமார் பதுங்கியிருக்கலாம் என போலீஸாருக்குத் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து முத்துக்குமாரின் நட்பு வட்டாரத்தை போலீஸார் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளனர். நண்பர்களையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விரைவில் முத்துக்குமார் குறித்த துப்பு கிடைக்கும் என போலீஸார் நம்புகின்றனர்.

தூத்துக்குடிக்கும் ஒரு படை விரைந்தது..

இதற்கிடையே, நல்ல முத்துக்குமார் சொந்த ஊரான தூத்துக்குடியில் இருக்கலாம் என்று போலீஸாருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கும் ஒரு போலீஸ் படை விரைந்துள்ளது

விரைவில் நல்லமுத்துக்குமார் குறித்த தகவல் கிடைத்து அவரைப் பிடித்து விடுவோம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X