நயன்தாரா-பிரபு தேவா இன்றும் ஆஜராகவில்லை.. 3வது சம்மன் அனுப்ப உத்தரவு!

By Chakra

Nayanthara and Prabhu Deva
சென்னை: ரம்லத் தொடர்ந்த வழக்கில் பிரபு தேவாவும் - நயன்தாராவும் இந்த முறையும் ஆஜராகவில்லை. இதனால் மூன்றாவது சம்மன் அனுப்புமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் ஜனவரி 21-ம் தேதிக்குள் இருவரும் ஆஜராக வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறியுள்ளது.

நயன்தாராவுடனான பிரபுதேவாவின் கள்ளத் தொடர்பை எதிர்த்து பிரபுதேவா மனைவி ரம்லத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கணவரை தன்னுடன் சேரவிடாமல் தடுக்கிறார் பிரபு தேவா என்றும், தங்களைச் சேர்த்து வைக்குமாறும் அதில் கோரியிருந்தார். இன்னொரு வழக்கில் நயன்தாராவும் பிரபு தேவாவும் சேர்ந்து சுற்ற, பேட்டிகள் தர தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் ரம்லத். மேலும் பிரபுதேவாவின் பெயரில் உள்ள சொத்துக்களை விற்கவும் தடை கோரியிருந்தார்.

இந்த வழக்கில் ஆஜராகுமாறு ஏற்கெனவே பிரபு தேவாவுக்கும் நயன்தாராவுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் நவம்பர் 23-ம் தேதி (இன்று) நீதி மன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. சம்மனும் அனுப்பப்பட்டது.

இந்த வழக்கு இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. எப்படியும் பிரபு தேவாவும் நயன்தாராவும் நீதிமன்றத்துக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்த்து பத்திரிகையாளர்களும் பார்வையாளர்களும் குவிந்துவிட்டனர்.

ஆனால் இருவரும் வரவில்லை. இதைத் தொடர்ந்து வழக்கை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், இருவருக்கும் மூன்றாவது சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X