பெரிய நடிகர்களின் படங்கள் சாதாரண நாட்களில் வெளியாகக் கூடாது!

By Staff

Rajini
பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் இனி சாதாரண நாட்களில் வெளியாகக் கூடாது, பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே வெளியாக வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இது தவிர அதிக பிலிம்ரோலை பயன்படுத்தும் இயக்குநர் மீது நடவடிக்கை போன்றவை உள்பட மேலும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், சென்னை 'பிலிம்சேம்பர்' திரையரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, சங்க தலைவர் ராம.நாராயணன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

சமீபத்தில் சட்டசபையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கேளிக்கை வரியை நீக்குவது பற்றியும், அரசாங்க இடங்களில் படப்பிடிப்பு நடத்த செலுத்த வேண்டிய கட்டணத்தை உயர்த்துவது குறித்தும் மறுபரிசீலனை செய்யப் போவதாக தமிழக அரசு குறிப்பிட்டு இருந்தது.

தமிழ் திரையுலகை வாழ வைத்துக்கொண்டிருக்கும் முதல்வர் கருணாநிதி மறுபரிசீலனை என்ற நிலையை மீண்டும் மறுபரிசீலனை செய்து, வரியில்லாத சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. முதல்வர் மருத்துவமனையிலிருந்து திரும்பியதும், நேரில் சந்தித்து மனு கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

சிறு முதலீட்டில் தயாரிக்கப்படும் நேரடி தமிழ் திரைப்படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. அதனால் தமிழகம் மற்றும் புதுவையில் 80 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகும் பெரிய நடிகர்கள் நடித்த, பெரிய முதலீட்டு படங்கள் இனிமேல் பொங்கல், ஜனவரி 26ந் தேதி, ஏப்ரல் 14, மே 1, ஆகஸ்டு 15, தீபாவளி ஆகிய 6 விழாக்கால நாட்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும்.

வாரத்துக்கு 2 நேரடி தமிழ் படங்கள் மட்டுமே வெளியிடப்பட வேண்டும். தணிக்கை சான்றிதழை வைத்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அமைக்கப்படும் குழு அந்த படங்களின் வெளியீட்டு தேதியை வரமுறைப்படுத்தும்.

இயக்குநர்கள் மீது நடவடிக்கை:

14,000 அடி நீள படத்துக்கு சில இயக்குனர்கள் 5 லட்சம் அடி பிலிம் ரோல்களை பயன்படுத்துகிறார்கள். பெரிய முதலீட்டு படங்களுக்கு உச்சபட்சமாக 125 ரோல் நெகட்டிவ் (1,25,000 அடி நெகட்டிவ்) மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிறிய முதலீட்டு படங்களுக்கு உச்சபட்சமாக 70 ரோல் நெகட்டிவ் (70,000 அடி நெகட்டிவ்) மட்டுமே இனிமேல் பயன்படுத்த வேண்டும்.

இதற்கு மேல் அளவுக்கு அதிகமாக நெகட்டிவை பயன்படுத்தும் இயக்குனர் மீது, இயக்குனர்கள் சங்கத்துடன் கலந்து பேசி, நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தீர்மானம் இன்றிலிருந்து தொடங்கப்படும் திரைப்படங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அட்வான்ஸ் வாங்கும் வரிசையின் அடிப்படையில்தான் படங்களை முடித்துக் கொடுக்க வேண்டும். தயாரிப்பாளர்களும் அட்வான்ஸ்' கொடுத்தவுடன், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்காதவர்களின் படங்கள் சம்பந்தப்பட்ட புகாரை சங்கம் ஏற்காது.

நஷ்டத்துக்கு பெரிய நடிகர்கள் பொறுப்பு:

பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு அந்த படம் நஷ்டம் அடைந்தால், அந்த படத்தில் நடித்த கதாநாயகன், இயக்குனர் இருவரும் அந்த படம் ரிலீஸ் ஆன தேதியில் இருந்து ஒரு வருடத்துக்குள், அந்த தயாரிப்பாளரின் விருப்பத்தின் பேரில், அவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் படம் செய்து தர வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில், தமிழ் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும், பேன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர்கள் அன்பாலயா பிரபாகரன், எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.முரளிதரன், பொருளாளர் எம்.காஜாமைதீன் மற்றும் ஏராளமான பட அதிபர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

இந்த தீர்மானங்கள் குறித்து விரைவில் ஆய்வு செய்ய கூடுகிறது நடிகர் சங்கம். காரணம், இதில் பல தீர்மானங்கள் நடிகர்களை நேரடியாகவே பாதிப்பது போல் உள்ளதாம்.

கோடையை இன்னும் சூடாக்க பரபரப்பு வேண்டாமா!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X