ஊமை விழிகள் ஸ்டைலில் வின்சென்ட் செல்வாவின் 'மூங்கில் விழிகள்'!

By Shankar

ஊமை விழிகள் ஸ்டைலில் தயாராகும் த்ரில்லர் 'மூங்கில் விழிகள்' - வின்சென்ட் செல்வா இயக்குகிறார்!

எண்பதுகளில் தமிழ் திரையுலகுக்கே ட்ரெண்ட் செட்டராக மாறிய படம் ஆபாவாணனின் ஊமை விழிகள். பிலிம் இன்ஸ்ட்டிட்யூட் மாணவர்களுக்கு தனி மரியாதையையும் அங்கீகாரத்தையும் அந்தப் படம் ஏற்படுத்தித் தந்தது.

அந்தப் படம் வந்து 25 ஆண்டுகளைத் தாண்டிய நிலையில், அதே பாணியில், கிட்டத்தட்ட அதே போன்ற தலைப்பில் புதிய த்ரில்லர் ஒன்று உருவாகிறது.

இந்தப் படத்தை இயக்குபவர், ப்ரியமுடன், யூத், வாட்டாக்குடி இரணியன் என வித்தியாசமான படங்கள் தந்த இயக்குநர் வின்சென்ட் செல்வா.

இந்தப் படம் குறித்து வின்சென்ட் செல்வா நம்மிடம் கூறுகையில், "ஒரு நாள் ஆபாவாணன் சாரிடம் பேசிக் கொண்டிருந்த போதுதான், இப்படி ஒரு படம் பண்ணும் யோசனை வந்தது. ஆபாவாணன் என்னை மிகவும் உற்சாகப்படுத்தி, இந்தப் படத்தை பண்ணச் சொன்னார்.

ஊமை விழிகள் பாணியில் இந்தப் படம் உருவாகிறது. ஆனால் வேறு கதை. தம்பி ராமையா, சந்தானம் முக்கிய வேடங்களில் நடிக்கிறாரா்கள்.

இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த தீப்தி நம்பியார். இன்னொருவர் புதுமுகம்.

படத்துக்கு மூங்கில் விழிகள் என்று பெயர் வைத்திருக்கிறோம். தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர் ஒருவர் வில்லன் வேடத்தில் நடிப்பார். இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். பெயரை பின்னர் அறிவிக்கிறோம். இரண்டு பாடல்களை ஒலிப்பதிவு செய்துள்ளோம், ஸ்ரீகாந்த் தேவா இசையில்," என்றார்.

ஊமை விழிகள் பெற்ற வெற்றியை மூங்கில் விழிகளும் பெறட்டும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X