இசையின் யுவராஜன்.. யுவன் சங்கர் ராஜா.. 23 வருஷமா அந்த மேஜிக் தொடருது.. #23YearsofYuvanism!

சென்னை: புலிக்கு பிறந்தது பூனையாகாதுன்னு சொல்வாங்களே, அதுபோல தான் இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவும், 23 வருஷமா தனது இசையால், இளைஞர்களை கட்டி போட்டு வைத்துள்ளார்.

1997ம் ஆண்டு வெளியான சரத்குமாரின் அரவிந்தன் படத்திற்கு இசையமைத்து, இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன் சங்கர் ராஜா.

அரவிந்தன் படம் திரைக்கு வந்து இன்றுடன் 23 வருடங்கள் ஆகும் நிலையில், 23 வருட யுவனிஸம் #23YearsofYuvanism என்ற ஹாஷ்டேக்குடன் டிரெண்டாகி வருகிறது.

16 வயதில்

அப்பா இசைஞானி என்பதால், ரத்தத்திலேயே யுவன் சங்கர் ராஜாவுக்கு இசை ஊறி இருக்கிறது. மேலும், தனது முயற்சியால், இசையை முறையாகக் கற்றுக் கொண்ட யுவன், தனது 16 வயதிலேயே, டி. சிவா தயாரிப்பில், டி. நாகராஜன் இயக்கத்தில், சரத்குமார், நக்மா நடிப்பில் 1997ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

சாதாரண விஷயம் அல்ல

தமிழ் சினிமாவில், தொடர்ந்து 23 வருடங்களாக இசையமைத்து வருவது என்பது சாதாரண விஷயம் கிடையாது என்றும், எத்தனையோ ராக் ஸ்டார்கள் வந்தாலும், நீங்க தான் எப்போதும் எங்களுக்கான ராக் ஸ்டார், வலிமை படத்தின் இசைக்காக காத்திருக்கிறோம் என தல ரசிகர்கள், யுவன் சங்கர் ராஜா ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மாயக் குரல்

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், அவர் பாடும் காதல் பாடல்கள் வேற லெவலில் இருக்கும், அதற்கு காரணம் அவரது மாயக் குரல் தான். 23 வருடங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு, இசையமைத்து, பாடல்களை பாடி வந்தாலும், இன்னமும் அந்த மேஜிக் வாய்ஸ், இளமையுடனே அப்படியே வசீகரிக்கிறது.

அஜித் படங்களுக்கு

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தாலும், தல அஜித்துக்கு அவர் போட்டுள்ள பாடல்கள், மற்றும் மாஸ் பிஜிஎம்கள் எப்போதுமே தனி சிறப்பை பெற்றுள்ளது. சிட்டிசன், பில்லா, பில்லா 2, ஆரம்பம், அசல், நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

தொந்தரவு பண்ணியிருக்கேன்

அஜித் - யுவன் காம்பினேஷன் போலவே, யுவன் - சிம்பு காம்பினேஷனிலும் பல ஹிட் பாடல்கள் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இன்றளவும் இருக்கிறது. மன்மதன், வல்லவன், வானம், தொட்டி ஜெயா, சிலம்பாட்டம், இது நம்ம ஆள் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். யுவன் குறித்து, சிம்பு பேசிய நெகிழ்ச்சி வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

தனுஷுடன்

நடிகர் தனுஷின் சினிமா வாழ்க்கை யுவன் இசையிலே தான் தொடங்கியது. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, மரியான், மயக்கம் என்ன, மாரி 2 என பல படங்களில், தனுஷ் - யுவன் காம்போ பல எவர்க்ரீன் பாடல்களையும் ரொமான்டிக் நம்பர்களையும் கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X