2 குழந்தைகள் பலி வழக்கு: நடிகர் திலகன் ஜாமீனில் விடுதலை!

By Shankar

Thilakan
திருவனந்தபுரம்: விபத்தில் இரண்டு குழந்தைகள் பலியான வழக்கில் மலையாள நடிகர் திலகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

நிலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சில தினங்களுக்கு முன் காரில் சென்றார் திலகன். அப்போது முன்னே சென்ற ஆட்டோ மீது கார் மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் பெரோஸ்கான் மகன் பர்வீன்கான், மகள் பாத்திமாஆகியோர் இறந்தனர்.

விபத்தில் திலகனும் காயம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் திலகன் நேற்று போலீசாரிடம் சரணடைந்தார். அவரைக் கதைு செய்த போலீசார் உடனடியாக விடுதலை செய்துவிட்டனர்.

"இந்த விபத்து எப்படி நடந்ததென்று திலகனால் கூற முடியவில்லை. மேலும் அவரது வாகனம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது. திலகனின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளோம்", என்றார் மலப்புரம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்.

விபத்தில் ஏற்பட்ட காயம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக அவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது உதவியாளர் சவீதாவும் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

விபத்தில் இரு குழந்தைகளைப் பறிகொடுத்ததோடு, படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவர் மனைவி இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X