twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜயகாந்த் பிறந்த நாள்... ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி!

    By Chakra
    |

    Vijayakanth
    சென்னை: விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி சென்னையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

    தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. ஈழத் தமிழர் துன்பப்படுவதால் தனது பிறன்த நாளை கொண்டாடுவதில்லை என விஜயகாந்த் முன்பு அறிவித்திருந்தார். ஆனாலும் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் அவர் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர்.

    இது குறித்து மத்திய சென்னை மாவட்ட தே.மு. தி.க. செயலாளர் க.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் தன்னால் இயன்ற உதவிகளை தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு சிறு வயது முதலே செய்து வந்தவர்.

    சினிமாவுக்கு வந்த பின்னர் தன் உதவிக் கரங்களை விரிவுபடுத்தி மாணவர்களின் கல்விக்கு உதவி செய்தல், ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம், இலவச மருத்து வமனை, ஊனமுற் றோருக்கு மூன்று சக்கர வண்டி என வருடந்தோறும் உதவிகளை செய்து கொண்டிருந்தார்.

    நாட்டில் எங்கு இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும் முதலில் உதவிகரம் நீட்டுபவர் கேப்டன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட மகத்தான மனிதரை நல்ல ஒரு அரசியல் தலைவராக மக்கள் அங்கீகாரம் கொடுத்த பின்பு தன்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த விருத்தாசலம் தொகுதியின் மக்களுக்கு சட்டமன்ற நிதி மட்டுமல்லாது தன் சொந்த பணத்தில் பல நலத் திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார்.

    அவரைப் பின்பற்றி அவரது தொண்டர்களை நாங்களும், அவர் பிறந்த நாளை மாவட்டந்தோறும் பல நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுவதில் பெருமை அடைகிறோம். மத்திய சென்னை மாவட்டத்தின் சார்பாக அன்ன தானம், வேட்டி, சேலை வழங்குதல், ரத்ததானம், விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க பரிசு என பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...." என்று கூறியுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X