மறியல்: ரோஜா கைதாகி விடுதலை!

கைத்தறி நெசவாளர் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என ஆளும் கட்சிக்கு எதிராக மறியல் போராட்டம் நடத்த எதிர்க் கட்சிகளான தெலுங்கு தேசம், பாஜக, இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகள்,தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பிரஜா ராஜ்யம், நவ தெலுங்கானா, லோக்சத்தா போன்ற அரசியல் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
இந்தப் போராட்டம் ஹைதராபாத்தி்ல் நடைபெற்றது.
சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ், ரோஜா உட்பட தலைவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது, அவர்களை மீறி ரோஜா ஊர்வலம் சென்றார்.
ரோஜாவையும், தெலுங்கு தேசம் கட்சியினரையும் கைது செய்த போலீசார், காந்தி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். உடனே போலீசாரின் செயலைக் கண்டித்து, போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அமர்ந்து போலீசாருக்கு எதிராக குரல் கொடுத்து மறியலில் ஈடுபட்டார் ரோஜா. பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.


Click it and Unblock the Notifications











