சினிமா தொழிலாளர்களுக்கு ரயில் கட்டண சலுகை
டெல்லி: சினிமாத் துறையில் 'பேக்ரூம் பாய்ஸ்' என்றழைக்கப்படும் திரைக்கு பின் பணியாற்றும் தொழிலாளர்கள் ரயிலில் பயணம் செய்ய சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
சினிமாத் துறையில் பலராலும் கவனிக்கப்படாத திரைக்கு பின் பணியாற்றும் தொழிலாளர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த சலுகைகளை வழங்குவதாக மமதா பானர்ஜி தன்து பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
இதன்படி, சினிமா தயாரிப்பு தொடர்பாக பயணம் மேற்கொள்ளும் தொழிலாளிகள் 2வது ஸ்லீப்பர் வகுப்பில் 75 சதவீதம் கட்டண சலுகை பெறலாம்.
அதேபோல், முதல் வகுப்பு, ஏசி சேர் கார், 3டையர் ஏசி, 2 டையர் ஏசி ஆகிய வகுப்புகளில் 50 சதவீத கட்டண சலுகை பெறலாம். ராஜ்தானி, ஷதாப்தி, ஜனஷதாப்தி ஆகிய ரயில்களிலும் இந்த சலுகை உண்டு.
Comments


Click it and Unblock the Notifications