கேபிளில் 'கடவுள்' - உரிமையாளருக்கு காப்பு!

By Staff

Naan kadavul
கேபிள் டிவியில் நான் கடவுள் படத்தை போட்ட கோவில்பட்டி கேபிள் டிவி ஆபரேட்டரை போலீஸார் கைது செய்தனர்.

இயக்குனர் பாலா இயக்கிய நடிகர் ஆர்யா நடித்த படம் நான் கடவுள். வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கோவில்பட்டி ராமசாமி தியேட்டரில் நான் கடவுள் படம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர் ராதாகிருஷ்ணனுக்கு கோவில்பட்டி ஜோதி கேபிளில் இருந்து ராஜீவ் நகர் பகுதியில் நான் கடவுள் படம் ஒளிபரப்பப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த ரஜீவ் நகர் பகுதிக்கு சென்று சோதனையிட்டார். அப்போது நான் கடவுள் படம் கேபிள் டிவியில் ஓடிக்கொண்டிருந்தது.

உடனடியாக அவர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் நான் கடவுள் படம் ஒளிபரப்பப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து கேபி்ள் டிவி உரிமையாளர் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது கேபிள் அலுவலகத்தில் இருந்து நான் கடவுள் படத்தி்ன் சிடி, கலர் டிவி, டிவிடி பிளேயர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X