கிருஷ்ணகிரியில் குழந்தைகள் திரைப்பட விழா துவங்கியது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இந்திய குழந்தைகள் திரைப்பட கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் குழந்தைகள் திரைப்பட விழா நேற்று துவங்கியது. இதை மாவட்ட ஆட்சியர் வி. அருண் ராய் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரியில் குழந்தைகள் திரைப்பட விழாவை நேற்று மாவட்ட ஆட்சியர் அருண் ராய் துவக்கி வைத்தார். இந்த விழா சாந்தி தியேட்டரில் நடந்தது. இது தொடர்ந்து 6 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான நேற்று வெற்றிப் பாதை படம் திரையிடப்பட்டது. இப்படத்தை மாவட்ட ஆட்சியர் குழந்தைகளுடன் கண்டுகளித்தார்.
இத்திரைப்பட விழாவில் திரையிடப்படும் பிற மொழிப் படங்கள் குழந்தைகளின் வசதிக்காக தமிழில் டப் செய்யப்பட்டுள்ளன. இதில் அதிசய கோட்டை, பால்ய மேதை, தபசி, மல்லி, தன்னம்பிக்கை, ஆயிஷா ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.
கல்வித் துறை அதிகாரிகள் இவ்விழாவில் கலந்து கொள்ளும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











