உத்தரவாதத்துக்கு போலி ஆவணம் கொடுத்த சினிமா பைனான்ஸியர் கைது!
சென்னை: கடன் உத்தரவாதத்துக்காக போலி ஆவணங்கள் கொடுத்த சினிமா பைனான்சியரை போலீசார் கைது செய்தனர்.
கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் சீனிவாசன். தொழில் அதிபர். இவர் சென்னையில் தொழில் தொடங்குவதற்காக வங்கி ஒன்றில் ரூ.10 கோடி கடன் கேட்டிருந்தார். இதற்காக வளசரவாக்கத்தைச் சேர்ந்த கணேஷ் என்ற சினிமா பைனான்சியர் உத்தரவாதம் கொடுத்தார்.
இதற்காக கணேஷ் ரூ.59 லட்சம் கமிஷனை பெற்றுள்ளார். வங்கி அதிகாரிகள் உத்தரவாதம் தொடர்பான ஆவணங்களைச் சரி பார்த்தபோதுதான் அவை போலியானவை என்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷை கைது செய்தனர்.
More from Filmibeat
arrest கைது சினிமா பைனான்ஸியர் போலி ஆவணம் வங்கிக்கடன் cheating case cinema financier fake documents police


Click it and Unblock the Notifications











