வைரமுத்து மகன் திருமணம்... கருணாநிதி, ரஜினி பங்கேற்பு

By Chakra

Vairamuthu
சென்னை: கவிஞர் வைரமுத்து- பொன்மணி தம்பதியின் இளைய மகன் கபிலன் வைரமுத்துவின் திருமணம் செப்டம்பர் 5-ம் தேதி நடக்கிறது.

இந்த திருமணத்தை முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

கபிலன் வைரமுத்து ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் சமுகவியல் - தகவல் தொடர்பு கல்வியில் பட்ட மேற்படிப்பு படித்துள்ளார். குளோபல் மீடியா என்ற தனியார் நிறுவனத்தில் இயக்குனர்களில் ஒருவராக பணியாற்றுகிறார்.

கபிலன் வைரமுத்துவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணமகள் டாக்டர் ரம்யா. மகப்பேறு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான உயர்கல்வி கபடித்துள்ளார். இவரது தந்தை மாயாண்டி, திருச்சி மாவட்ட நீதிபதியாக பணியாற்றுகிறார். மணமகளின் தாயார் மதுரை யாதவர் மகளிர் கல்லூரியில் வரலாற்றுத் துறைத் தலைவராக உள்ளார்.

கபிலன் வைரமுத்து- ரம்யா திருமணம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந்தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடக்கிறது.

முதல்வர் கருணாநிதி தலைமை ஏற்று இந்தத் திருமணத்தை நடத்தி வைக்கிறார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், இயக்குநர்கள் பாலசந்தர், பாரதிராஜா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று வாழ்த்தி பேசுகிறார்கள்.

திருமண வரவேற்பு மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் 8-ந்தேதி மாலை நடக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X