'பார்' கேட்கும் தியேட்டர் ஓனர்கள்!

By Staff

Theater owner meeting
தியேட்டர்களில், பார் வசதி செய்துகொள்ள அனுமதி வழங்கி உத்தரவு வழங்கும்படி தீர்மானம் நிறைவேற்றி அதை தமிழக அரசுக்கும் அனுப்பியுள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர்.

குசேலன் பட நஷ்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் நேற்று தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. அப்போது முக்கிய தீர்மானங்கள் அங்கு நிறைவேற்றப்பட்டன.

அதில் முக்கிய தீர்மானமாக தியேட்டர் வளாகங்களில் பார் வைக்க அனுமதி தர வேண்டும் என்பது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் கூறுகையில், திரையரங்குகளில் வருமானத்தைப் பெருக்கும் பல்வேறு வழிகளைப் பற்றி ஆலோசித்து வருகிறோம். அதில் ஒன்று அரங்குகளில் பார் திறப்பது.

வெளிநாடுகளில் இதுபோல பார் வசதி கொண்ட திரையரங்குகள் உள்ளன. இதனால் பெண்கள் வருவது பாதிக்கப்படுவதில்லை. எனவே இதேபோல தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் பார்கள் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

இதுதொடர்பான தீர்மானத்தை தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் அனுப்பி வைத்துள்ளதாக பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

இருப்பினும் தியேட்டர் உரிமையாளர்களின் இந்தக் கோரிக்கை திரையுலகில் இரு வித கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X