பிரஷாந்த்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமியின் அண்ணி தற்கொலை-அண்ணன் கைது

சென்னை தியாகராயநகர் மெலாடி ரோடு பகுதியை சேர்ந்தவர் பொன்குமார்(35). இவரது மனைவி அபிராமி (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பொன்குமார், கிரகலட்சுமியின் சகோதரர் ஆவார்.
பொன்குமார் தொழிலதிபர் ஆவார். இவரது அண்ணன் நாகராஜ். இரு சகோதரர்களும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இருவருக்குள்ளும் சொத்துப் பிரச்சினை வெடித்தது. கடந்த2 வருடங்களாக சர்ச்சை நிலவி வந்தது.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி அன்று இரவு பொன்குமாரின் மனைவி அபிராமி வீட்டு குளியலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாம்பலம் போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனர். மனைவியின் தற்கொலைக்கு தனது அண்ணன் நாகராஜ், அவரது மைத்துனர் யுவகிருஷ்ணா ஆகியோர்தான் காரணம் என்று பொன்குமார் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து அபிராமி தற்கொலை செய்ய தூண்டியதாக நாகராஜையும், யுவகிருஷ்ணாவையும் போலீசார் கைது செய்துகோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Click it and Unblock the Notifications











