இந்தி கஜினிக்கு தமிழகத்தில் இடைக்கால தடை!

தமிழ்ல் பெரும் வெற்றி பெற்ற கஜினி படம் இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. ஆமிர்கான் கதாநாயகன். ஆசின் நாயகியாக நடித்துள்ளார். தமிழ்ப் படத்தை இயக்கிய முருகதாஸே இந்தியிலும் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் நாளை வெளியாகிறது. சென்னையில் மிகப்பெரிய அளவில் டிக்கெட் முன்பதிவு நடந்தது.
இந்நிலையில் இப்படத்தை தமிழில் இந்தப் படத்தைத் தயாரித்த சேலம் சந்திரசேகர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், கஜினி படத்தின் உரிமை என்னிடம் உள்ளது. எனது அனுமதி பெறாமல் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தியில் தயாரித்துள்ளது. எனவே படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், என்.எஸ்.கே சிவராஜு எதிர்மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் திவாகர் வாதிட்டனர். வாதங்களைக் கேட்ட நீதிபதி பி.ஆர்.சிவகுமார், படத்தை தமிழகத்தில் வெளியிட இடைக்கால தடை விதித்தார்.
இதை எதிர்த்து கீதா ஆர்ட்ஸ் அப்பீல் செய்துள்ளது. இதன் மீதான விசாரணை இன்று நடக்கிறது. வழக்கு நடந்தாலும், படத்தை வெளியிட மட்டும் அனுமதிக்குமாறு கீதா ஆர்ட்ஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











