சினிமா பத்திரிக்கையாளருக்கு ஜெ. உதவி!
பிரபல சினிமா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் ராமமூர்த்திக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ரூ. 3 லட்சம் தந்து உதவியுள்ளார்.
பழம் பெறும் சினிமா பத்திரிகையாளரான இவர். நடிகர் நடிகைகளின் பிறந்த நாள், விருது பெற்ற நாள், வில்லங்கமான நாள் எதுவாக இருந்தாலும் பத்திரிகையின் பெயரில் ஒரு பொக்கே- சால்வையோடு ஆஜராகிவிடுவார்.
சில ஆண்டுகளுக்கு முன் இவர் பணி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து பாரதிராஜா- செல்வமணி- கோவைத்தம்பி ஆகியோர் ஆரம்பித்து உருப்படாமல் போன தமிழ்த் திரை தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளராக கொஞ்ச நாள் இருந்தார். இன்னும் கூட கொஞ்ச நாள் இருந்திருப்பார் அந்தப் பொறுப்பில். ஆனால் அவரது நேரம், முதல் மாத சம்பளம் கொடுத்ததோடு சரியாம். தொடர்ந்து பல மாதங்கள் சம்பளம் தரப்படாததால், பணியை நிறுத்திக் கொண்டார்.
இந்தச் சூழலில் தான் பணியாற்றிய சினிமா பத்திரிக்கையில் ஓய்வுக்குப் பிந்தைய சலுகைகள், நிதிப் பலன்கள் எதையும் தரவில்லை என்று ஜெயலலிதாவிடம் போய் புகார் செய்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு அவர் மீது எப்போது தனி அபிமானம் உண்டு. ஜெயலலிதா முன்னணி நடிகையாக இருந்த காலத்திலிருந்தே இவருக்கு நன்கு பழக்கம். முன்பு ஜெயலலிதாவுக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடந்தபோது கூட, இவர் போய் பொக்கே கொடுத்துவிட்டு, அனைத்துப் பத்திரிகையாளர்கள் சார்பில் கொடுக்கப்பட்டதாக 'அம்மா'விடம் பில்ட் அப் கொடுத்தார். ஜெயலலிதாவிடம் கலைமாமணி விருதும் வாங்கியுள்ளார்.
ராமமூர்த்தியின் கதையைக் கேட்ட ஜெயலலிதா, தான் இதில் செய்ய ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார்.
வேண்டுமானால் என்னால் ஆன உதவி என்று கூறி தனிப்பட்ட முறையில் ரூ. 3 லட்சத்தை அன்பளிப்பாகத் தந்து தனது நன்றிக் கடனைத் தீர்த்து அனுப்பி வைத்தாராம்.


Click it and Unblock the Notifications











