தமிழில் வெளியாகும் பாராநார்மல் ஆக்டிவிட்டி!

படம் பார்த்த அத்தனைபேரும் பயத்தில் உறைந்து, தூக்கமிழந்து தவித்தனர் என்றால் மிகையல்ல. இந்தப் படம் பார்த்த இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க், இரண்டுநாட்கள் கழித்து அந்த டிவிடியை திருப்பி அனுப்பிவிட்டாராம். 'இந்த டிவிடி வீட்டிலிருக்கும் வரை என்னால் தூங்க முடியாது போலிருக்கிறது' என்று அவர் காரணம் கூறியிருந்தார்.
நாம் உறங்கும் போது நம்மைச் சுற்றி வினோதமாக பல நிகழ்வுகள் நடக்கின்றன. அதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான் பாராநார்மல் ஆக்டிவிட்டி.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரபரப்பாக ஓடி வசூலைக் குவித்த இந்தப் படம் தமிழில் 'கொல்லத் துடிக்கும் மனசு' என்ற பெயரில் ஏப்ரல் 1-ல் ரிலீசாகிறது. மிகச் சிறந்த முறையில் இந்தப் படம் டப் செய்யப்பட்டுள்ளது, ஒரு பெரிய ப்ளஸ் பாயின்ட்.
ஹன்ஸா பிக்சர்ஸ் மற்றும் ஏட்மேஜிக்ஸ் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தமிழகத்தில் 75 பிரிண்ட்கள் வரை திரையிட உள்ளனர்.


Click it and Unblock the Notifications











