'ஆத்ரேயாவோட வில்லத்தனம் அட்டகாசம்'... சூர்யாவைப் புகழும் ரசிகர்கள்
சென்னை: சூர்யா, சமந்தா, நித்யாமேனன், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் '24'.
'யாவரும் நலம்' புகழ் விக்ரம் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கிறது.
இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பின் சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் '24' ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதை இங்கே பார்க்கலாம்.
சர்வதேச தரம்
24 முதல் பாதி முடிந்து 2 வது பாதிக்காக காத்திருக்கிறேன். படத்தை சர்வதேச தரத்தில் கொடுத்த கலை மற்றும் விப்எக்ஸ்(VFX) குழுவிற்கு பாராட்டுக்கள் என்று ஜித்து சூர்யா கூறியிருக்கிறார்.
சிறந்த படம்
24 சமீபத்தில் நான் பார்த்த படங்களில் மிகச்சிறந்த படம். விக்ரம் குமார் திரைக்கதை, இயக்கம் இரண்டுமே சூப்பர் என்று பாராட்டியிருக்கிறார் ஏஜி.
விக்ரம் குமார்
விக்ரம் குமார் என்னை ரொம்பவே கவர்ந்து விட்டார். பிடித்த இயக்குநர் பட்டியலில் விக்ரம் குமாரையும், படங்களில் இப்படத்தையும் சேர்த்துக் கொள்கிறேன் என்று புவன் கூறியிருக்கிறார்.
கிளைமாக்ஸ்
என்ன ஒரு கிளைமாக்ஸ்! ஆத்ரேயா, மணி இருவரும் மிரட்டி விட்டனர் என்று பாராட்டியிருக்கிறார் கவுதம் முரளி.
என்ன ஒரு வில்லத்தனம்
ஆத்ரேயா வில்லன்களின் ராஜாவாக மிரட்டியிருக்கிறார். கண்களை மூடவும் மறந்து விட்டேன். என்ன ஒரு வில்லத்தனம் என்று பாராட்டியிருக்கிறார் பிரவீன்.
காதல் காட்சிகளில்
விக்ரம் குமார் காதல் காட்சிகளில் கோட்டை விட்டாலும், டைம் டிராவல் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் என்று கார்த்திக் பாராட்டியிருக்கிறார்.
இதுபோல மேலும் பல ரசிகர்களும் பாராட்டி வருவதால் #24TheMovie ஹெஷ்டேக் தொடர்ந்து ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது.
மொத்தத்தில் சூர்யாவின் '24' திரைப்படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











