Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஆர்யாவை விமர்சித்த குகநாதனுக்கு நடிகர் சங்கம் கண்டனம்!
இது தொடர்பில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை:
சென்னை, தியாகராயநகர் அரங்கில் நடந்த 'உங்கள் விருப்பம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் ஆர்யாவை பற்றி பேசியதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.
ஆர்யா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர். தமிழ் ரசிகர்களை நம்பி வாழ்பவர். தமிழ் திரையுலக நடிகர்கள், பெப்சி தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோருடன் நட்புணர்வுடனும், நன்றியுடனும் பழகுபவர். அப்படிப்பட்டவர், தமிழ் நடிகர்களை பற்றி இழிவாக பேசியதாக ஒரு கயிறு திரித்து, ஒரு புதிய பிரச்சினையை கிளப்பி விட்டிருக்கிறார் வி.சி.குகநாதன். இது சுத்தப் பொய். அவர் எங்கும் அப்படிப் பேசவில்லை.
தமிழ் உணர்வில், தமிழக மக்களின் நலனில் தென்னிந்திய நடிகர் சங்கமும், அதன் உறுப்பினர்களாக உள்ள நடிகர், நடிகைகள் கொண்ட அக்கறை பற்றி இந்த நாடு அறியும். தமிழக மக்கள் அறிவார்கள்.
தொடர்ந்து இதுபோல் பொறுப்பற்று பேசியும், அறிக்கையையும் விட்டுவரும் வி.சி.குகநாதனின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது..."
-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.