சிமி படத்துக்கு ரஹ்மான் இசை

நீண்ட காலமாக சினிமா பக்கமே திரும்பிப் பார்க்காமல் இருப்பவர் சிமி. இந்த நிலையில் மீண்டும் அவர் சினிமாவுக்கு வருகிறார். ஆனால் நடிக்க அல்ல, தயாரிப்பாளராக வருகிறார்.
இதுகுறித்து சிமி கூறுகையில், படத் தயாரிப்பில் ஈடுபடப் போகிறேன். ஏற்கனவே ஒரு படத்தை எழுதி இயக்கியுள்ளேன். எனது அடுத்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
எனது கதையைக் கேட்டதும் அவருக்குப் பிடித்து விட்டது. உடனே ஓகே. சொல்லி விட்டார்.
விரைவில் படக் குழுவினர் குறித்து அறிவிப்பேன் என்றார் சிமி.
இந்தப் படம் ரொமான்டிக் காமடியா அல்லது வழக்கமான படமா என்பதை இப்போதே சொல்ல முடியாது. இது வித்தியாசமானதாக இருக்கும் என்றார் சிமி.
Comments


Click it and Unblock the Notifications