»   »  24: அடர்ந்த தாடி, கலைந்த முடியுடன் போஸ்டரில் 'மிரட்டும்' சூர்யா!

24: அடர்ந்த தாடி, கலைந்த முடியுடன் போஸ்டரில் 'மிரட்டும்' சூர்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் 24 படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டர்களை நடிகர் படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.

சூர்யா நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் 24. 'யாவரும் நலம்' விக்ரம் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சமந்தா, நித்யாமேனன் இருவரும் ஜோடியாக நடித்திருக்கின்றனர்.

ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.

இந்த போஸ்டரில் கோட்சூட் அணிந்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அடர்ந்த தாடி, கலைந்த தலைமுடி மற்றும் அதிகபட்ச மிரட்டல் பார்வையுடன் சூர்யா காணப்படுகிறார்.

இந்த போஸ்டரை பார்க்கும் போது திகிலூட்டும் விதமாக இருக்கிறது. இப்படத்தில் சூர்யா நடித்திருக்கும் 3 விதமான கெட்டப்களில் இதுவும் ஒன்று என்று கூறுகின்றனர்.

டைம் மெஷின் சம்பந்தப்பட்ட கதை என்பதும் சூர்யா தனது அதிகப்படியான உழைப்பைக் கொட்டியிருப்பதும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படம் தேர்தல் காரணமாக முன்கூட்டியே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
24: Suriya's new Look Posters Revealed now, He is Threatened Look on the Posters.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil